விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி அரகண்டநல்லூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முகாமில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர், ‘’நீங்கள் டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, வக்கீலா கவோ, நீதிபதியாகவோ, விஞ்ஞானியாகவோ, கலெக்டராகவோ, போலீஸ் அதிகாரியாகவோ, தொழில் அதிபராகவோ வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நானும், அன்புமணி ராமதாசும் உங்கள் நலம்கருதி பாடுபட்டு வருகின்றோம்.
இதற்கு தேவை அனைவரும் நன்கு படிக்க வேண்டும். பாமகவின் நோக்கமும் அதுதான். ஆனால் மற்ற கட்சி களின் நோக்கம் அனைவரும் குடிக்க வேண்டும் இதுதான் இன்றைய நிலை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
இதற்கு ஒரே வழி மற்ற கட்சிகளில் இருக்கும் வன்னியர்கள் அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி பா.ம.க. கட்சியில் சேர வேண்டும். அந்த நிலை வரும்போதுதான் நாம் ஆட்சி அமைக்க முடியும். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைத்தவுடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு.
அதாவது தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இல்லை என்ற நிலை ஏற்படும். அரசு மதுவை விற்பனை செய்து குடிக்க சொல்கிறது.
நான் படிக்க சொல்கிறேன். அடுத்த கையெழுத்து அனை வருக்கும் இலவச கல்வி. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் உயர் கல்வியை எளிதில் பெற முடியும்.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அங்கு அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம். அதற்கான தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும். இதன் மூலம் இளைஞர்களுக்கு உயர்க் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்கும் பொருளாதாரம் உயரும்.
இதனால் அனைவரின் குடும்பமும் உயரும். அத்துடன் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும். சமச்சீர் கல்வி கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சிதான் குரல் கொடுத்தது. பா.ம.க. ஒரு புதிய கல்வி கொள்கையை உருவாக்கி வைத்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் நூற்றுக்கும் 20 வன்னியர்களுக்கு வேலை கிடைக்கின்றது’’என்று தெரிவித்தார்.

2 comments:
play now action online games
Choose coolmath games run 3 and racing games, shooting games, sports games, arcade free games, action games, adventure games at bgames
Post a Comment